ஒமைக்ரான் தொற்று: கோவை வரும் வெளிநாட்டு விமான பயணிகளுக்கு பரிசோதனை

Author: Udhayakumar Raman
29 November 2021, 9:40 pm
coimbatore_airport_corona_updatenews360
Quick Share

வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு ஒமைக்ரான் தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சில நாள்களுக்கு முன் ஒமைக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கெரரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் பரவும் தன்மை வேகமாக உள்ளதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. இந்தப் பரிசோதனையானது சளி மாதிரிகளைச் சேகரித்து மேற்கொள்ளப்படுகிறது. கோவை விமான நிலையத்திலும் இந்தப் பரிசோதனையானது மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து பின் மாற்று விமானம் மூலம் கோவை வருபவர்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தப் புதிய வகை கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவின் அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கோவை விமான நிலையத்திலும், முன்னெச்சரிக்கையாக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இந்த ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இப்பரிசோதனை செய்யப்படும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவு வரும் வரை அவர்கள் எங்கும் செல்லக்கூடாது என்றும், அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Views: - 170

0

0