தமிழகத்தில் 3வது அலையாக வந்த ஒமிக்ரான் சுனாமி.. இதுக்கு ஒரே ஒரு தீர்வு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2022, 11:04 am
MA Subramanian -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3வது அலையாக பரவுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 15 வயதை தாண்டிய மாணவர்களுக்கு நாளை தடுப்பூசி போடும் பணியை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

தடுப்பூசி போடாத அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சென்னையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 86.22% பொதுமக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 58.82% பொதுமக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கியுள்ளது .2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திகொள்ளலாம்.

முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது. வரும் 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது. சென்னையிலேயே பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் முறையாக தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

முகக்கவசம், தடுப்பூசி போடுவது தான் இந்த பேரிடரில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி. ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் இணைந்து 3வது அலையாக பரவுகிறது.

தமிழகத்தில் விரைவில் virtual மருத்துவ சிகிக்சை அளிக்கப்படும். பள்ளி, கல்லூரி வளாகங்களில் சிறார்களுக்கு தடுப்பூசி மையங்கள் அமைகின்றன. உயர்கல்வி பயிலும் மாணவர்களில் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்தார்.

Views: - 390

0

0