கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்துகளில் திடீர் தீ : 2 பேருந்துகள் முற்றிலும் எரிந்து சேதம்!!
29 January 2021, 5:47 pmகோவை : கொரோனா முடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னிபேருந்துகளில் திடீர் தீ பிடித்து எரிந்து சேதமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஆம்னி பஸ்கள் பெருமளவில் இயக்கபடாமல் உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதே போல கோவை முத்துகவுண்டன் புதூர் பகுதியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மதியம் திடீரென இரண்டு ஆம்னி பஸ்கள் திடீர் தீப்பிடித்து எரிய துவங்கியது. தீ கட்டுபடுத்த முடியாமல் இரண்டு ஆம்னி பேருந்துகளும் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
பேருந்துக்கு அருகில் மக்கள் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து நிறுத்தப்பட்டிருந்த இடம் காலி இடம் என்பதால் அங்கு பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்திற்கு யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0