தவெக மாநாட்டுக்கு சென்ற தொண்டர்கள்.. கையில் பட்டாசுகளை வெடித்ததால் இளைஞர் படுகாயம்..!!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2025, 10:32 am
மதுரையில் நடைபெறும் த.வெ.க மாநாட்டில் பங்கேற்க கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை பகுதியில் இருந்து இளைஞர்கள் கூட்டமாக பேருந்தில் பயணித்துள்ளனர்
அவர்கள் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் உணவருந்த நிறுத்திவிட்டு அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அங்கு ஆர்வம் மிகுதியில் பட்டாசுகளை வைத்து வெடிக்க செய்துள்ளனர்

அப்போது பட்டாசு ஒரு நபர் பற்ற வைத்த நிலையில் ஓடந்துறை பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் அந்த வெடியை கையில் மேலே தூக்கி வீசி விளையாடி உள்ளார்
அப்போது எதிர்பாராத விதமாக கையில் வெடி வைத்த போது வெடித்து சிதறி உள்ளது இதில் சங்கருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு வெட்டு காயம் போல படுகாயம் அடைந்தார் பின்னர் அவரை மீட்டு அவரது நண்பர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்
