களைகட்டும் ஓணம் பண்டிகை… பூக்களால் ஜொலித்த கோவை ஐயப்பன் கோவில்… அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்…!!

Author: Babu Lakshmanan
8 September 2022, 8:57 am

கோவை : ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.

உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக, கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தப்பூ கோலமிட்டு கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரித்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாடும் மக்கள் அதிகாலை முதலே தங்களது குடும்பத்தினருடன் ஆலயம் வந்து சிறப்பு தரிசனம் மேற்கொள்ளும் வருகிறார்கள். நான் என்ற அகம்பாவத்தை ஒழித்து நாம் என்ற ஒற்றுமையை வலியுறுத்துவதாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் சதய உணவு தயாரித்தும், அத்திப்பூ கோலமிட்டும், உறவினர்களுடன் இப்பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!