காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை பலி : தவறான சிகிச்சை என உறவினர்கள் புகார்!!

1 February 2021, 11:22 am
Child Dead - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒன்றை வயது குழந்தை பலியானதால் தவறான சிகிச்சையே காரணம் என கூறி குந்தையின் பெற்றோர் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கொல்லக்கிணறு கிராமத்தினை சேர்ந்த மாடசாமி – வெயிலாட்சி தம்பதியின் 2வது மகன் ஒன்றரை வயதான மகிழரசன். கடந்த 27ந்தேதி மகிலரசன் காய்ச்சல் காரணமாக கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாரில் உள்ள கோகுலம் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்குள்ள மருத்துவர் சித்திரைதாஸ் சிங் என்பவர் சிகிச்சை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 28ந்தேதி அதிகாலையில் மகிழரசன் சிகிச்சை பலனில்லமால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையெடுத்து மகிழரசன் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெற்று ஊரில் சென்று அடக்கம் செயதுள்ளனர். இந்நிலையில் மருத்துவர் தவறான சிகிச்சை அளித்த காரணத்தினால் மகிலரசன் உயிரிழந்ததாக கூறி மகிலரசன் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். புகார் அளித்தால் முறைப்படி விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தினை கைவிட்டு கயத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறும் மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை அளித்த விவரங்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0