அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் அத்துமீறிய இளைஞர்.. சென்னையில் பரபரப்பு!

Author: Hariharasudhan
13 January 2025, 1:42 pm

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயதுமிக்க பெண் ஒருவர், பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு அவர் உள்நோயாளியாக இருக்கிறார். இந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் சிகிச்சையில் இருந்த அந்தப் பெண் நோயாளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் நடத்தில் விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவரின் பெயர் சதீஷ் என்பதும், அவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

Kilpauk sexual assault

மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.

இதையும் படிங்க: தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!

பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய மு.க.ஸ்டாலின், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? யார் அந்த SIR என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் ஸ்டாலின் அவர்களே, உங்கள் ஆட்சியில் இதுபோன்ற “சார்”கள் காப்பாற்றப்படுவதால் தான், மேலும் பல “சார்”கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!