வெறும் 10 நாட்களில் ஒரு கோடி பேர் பயணம் : மாநகர போக்குவரத்து கழகம்..!

11 September 2020, 6:59 pm
Quick Share

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து செப்டம்பர் 1 முதல் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ரயில், விமானம், பேருந்து உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

இந்த சூழலில் கடந்த செப்-1ஆம் தேதியில் இருந்து 4ஆம் கட்ட தளர்வு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதற்கான வழிகாடுத்தல் நெறிமுறைகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. அதன்படி இந்த தளர்வு தமிழகத்திலும் அமல்படுத்தப்பட்டது.

பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைக்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்படி மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் இதுவரை 1.01 கோடி பேர் பயணித்துள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாள் ஒன்றுக்கு 2,400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், நாள் ஒன்றுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். இதுவரை 10 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0