நியாயவிலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு: கூட்டுறவுத்துறை உத்தரவு

Author: kavin kumar
9 August 2021, 11:31 pm
Ngl Ration Shops
Quick Share

சென்னை: நியாயவிலை கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் விடுமுறை நாட்களில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்த கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவுத்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ நியாயவிலைக்‌ கடைகளில்‌ பணிபுரியும்‌ அனைத்து பணியாளர்களுக்கும்‌ நியாயவிலைக்கடை விடுமுறை தினங்களில்‌ ஒரு நாள்‌ பயிற்சி வகுப்பு நடத்த உத்தேசிக்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்படும்‌ கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்களில்‌ நடத்தவும்‌, தமிழ்நாடு கூட்டுறவு கன்றியம் மேலாண்மை இயக்குநரைக்‌ கேட்டுக்‌ கொள்ளப்பட்டுள்ளது.

அப்பயிற்சியில்‌ தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரிண்‌ செயல்திட்டப்படி பயிற்சியாளர்களின்‌ பட்டியலை தயாரித்து தங்கள்‌ மண்டலத்தில்‌ பணிபுரியும்‌ அனைத்து நியாயவிலைக்கடைப்‌ பணியாளர்களும்‌ எங்வித விடுதலுமின்றி கலந்து கொள்ளும்‌ வண்ணம்‌ தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌, பயிற்சியில்‌ கலந்து கொள்ளும்‌ பணியாளர்களுக்கு உரிய பயணப்படியை அவர்கள்‌ பணியாற்றும்‌ கூட்டுறவு சங்க நிதியிலிருந்து வழங்க சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு உரிய அறிவுரைகள்‌ வழங்குமாறு கேட்டுக்கொள்கிறது‌.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Views: - 199

0

0