பேரறிவாளனுக்கு 7-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு…!

Author: Udhayakumar Raman
24 November 2021, 10:55 pm
Perarivalan - updatenews360
Quick Share

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைச் சேர்ந்தவர் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், நளினி ,முருகன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என பல்வேறும் அமைப்புகளும் , அரசியல் கட்சிகளிலும் குரல் கொடுத்து வருகின்றன. கடந்த மே மாதம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சிறுநீரக தொற்று, மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவதால் அவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று கடந்த மே மாதம் 28 ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

உடனே பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையிலிருந்து ஜோலார்ப்பேட்டையிலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், வீட்டில் இருந்தப்படியே மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். ஒரு மாதகாலம் பரோல் முடித்து கடந்த ஜூன் மாதம் சிறைக்கு செல்லவிருந்த அவருக்கு, மேலும் ஒரு மாதம் காலம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல் ஜூலை , ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்,நவம்பர் என தொடர்ந்து 6 முறை தமிழக அரசு பேரறிவாளனின் பரோலை நீட்டித்து வந்தது. இந்நிலையில் பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதை தொடர்ந்து மேலும் 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு எழாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை காரணமாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிகப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Views: - 162

0

0