விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுபோட்டி …காளை முட்டி இளைஞர் பரிதாப பலி….!

Author: kavin kumar
18 January 2022, 4:09 pm
Quick Share

திருச்சி: நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி இளைஞர் பலியானார்.

திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டை தொடர்ந்து இரண்டாவது ஜல்லிக்கட்டு போட்டியாக நவலூர் குட்டப்பட்டில் கிராமத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400 ஜல்லிக்கட்டு காளைகள் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே சூரியூர் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி மன்னார்கோயில் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞர், ஜல்லிக்கட்டு மாடுகள் வெளியே வரும் கலெக்சன் பாய்ண்ட் அருகே நின்ற போது எதிர்பாராத விதமாக மாடு முட்டி தூக்கி வீசப்பட்டார்.

அதனைதொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக என கூறப்படுகிறது. இந்தநிலையில் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நடைபெறும் இரண்டாவது ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 263

0

0