உயிரோட சீரியஸ் புரியாமல் விமர்சிக்கக்கூடாது : ஆம்புலன்ஸ் விவகாரத்தில் அமைச்சர் சாடல்!
Author: Udayachandran RadhaKrishnan19 August 2025, 2:38 pm
திருச்சி தெற்கு மாவட்ட கழக ஆலோசனை கூட்டம் அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அன்புமணியின் பள்ளி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளில் தொழில்நுட்பம் கொண்டு செல்லும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
தொடக்க பள்ளிகளில் இடைநிறுத்தம் இதுவரை கிடையாது இனிமேல் நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தேசிய இடைநிற்றல் சராசரி 14 சதவீதம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் வெறும் 7.7சதவீதம் மட்டுமே மாநிலக் கல்விக் கொள்கை மூலமாக அனைவருக்கும் கொண்டு செல்கிறோம்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது துணை முதல்வர் பணி ஆணை வழங்கியுள்ளார். 13 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது. டிஆர்பி மூலமாக அடுத்து ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளோம்.
எல்லா இடங்களிலும் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய உள்ளோம். மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் 100 சதவீதம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 7,500கோடி மதிப்பீட்டில் கட்டிடம் இல்லையோ அங்கெல்லாம் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாம் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களையும் மற்ற மாநிலங்களில் பார்த்து செயல்படுத்தி வருகின்றனர். காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தது நமது அரசு தான் அதை பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் இது குறித்து பெருமைப்படுத்தி பேசி உள்ளார்.
ஒன்றிய பா.ஜ.க அரசு நமக்கு நிதி வழங்காத போது இதற்கெல்லாம் குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
செல்லும் இடங்கள் எல்லாம் ஆம்புலன்ஸ் அனுப்பப்படுகிறதாக குற்றச்சாட்டு வருகிறது என்ற இபிஎஸ் புகார் குறித்த கேள்விக்கு, முன்னாள் முதல்வராக இருந்தவர் உண்மைத் தன்மை தெரியாமல் இது போல் கூறக்கூடாது. பிரச்சாரம் செய்யும்போது நாங்கள் ஏன் ஆம்புலன்ஸ் அனுப்ப வேண்டும் அது உயிர் காக்கும் தன்மை அதனுடைய சீரியஸ் புரியாமல் அவர் கமெண்ட் பாஸ் செய்திருக்க கூடாது.
