ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

2 November 2020, 12:24 pm
rummy-site - updatenews360
Quick Share

மதுரை : உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் கோவையில் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, சென்னை மற்றும் பிற நகரங்களில் இதுபோன்ற ஆன்லை சூதாட்டங்களில் பணத்தை இழந்தவர்கள், தங்களின் உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. எனவே, உயிரைக் குடிக்கும் இதுபோன்ற ஆன்லை சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கக் கோரியும், அதனை அவசர வழக்காக விசாரிக்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையிடப்பட்டது. ஆனால் முறையீட்டுக்கு பதிலாக, மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

Views: - 29

0

0

1 thought on “ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

Comments are closed.