திமுக கொடுத்த கொலுசில் 16% தான் வெள்ளி இருக்கு : வாக்காளர்களுக்கு அளித்த பரிசுப்பொருளை கிண்டலடித்த அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2022, 12:18 pm

கோவை : திமுக ஆட்சி வந்த பின்பு தான் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பகுதி வெள்ளகிணரில் இரண்டாவது வார்டு பாஜக வேட்பாளர் வத்சலா வை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது மக்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்கள் தங்கள் பகுதிக்கு வர வேண்டும் என்றால் பாஜக வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார். இப்பகுதியில் தெருவிளக்கு பிரச்சினை அதிகமாக உள்ளதாக கூறிய அவர் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் உடனடியாக அனைத்து தெருக்களுக்கும் தெருவிளக்குகள் போட்டு தரப்படும் என தெரிவித்தார்.

பட்ஜெட்டில் பணம் ஒதுக்காமலும் அரசாணை இல்லாமலும் முதல்வர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் இருந்து திமுக குழு ஒன்று கோவைக்கு வந்து கொலுசுகளை வழங்கி வருவதாக தெரிவித்தார். அந்தக் கொலுசை ஆய்வு செய்தபோது அதில் 16 சதவீதம் தான் வெள்ளி உள்ளதாக தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலின் பொழுது எப்படி காதில் பூ சுற்றினார்களோ அதேபோன்று தற்பொழுது வந்துள்ளதாக மல்லிகைப்பூவை காண்பித்தார். அதேபோன்று இப்பகுதிக்கு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி வேண்டும் என்றால் அதற்கு இங்கு பாஜக நிர்வாகி இருந்தால்தான் முடியும் எனவும் மத்திய அரசின் திட்டங்களை எங்கு செயல்படுத்தவும் பாஜக நிர்வாகி வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் முன் களப் பணியாளர்களின் காலில் விழுந்து வணங்குபவர் எனவும் கோவில்களை காக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது பாஜக எனவும் ஆகவே பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அவர் பேசும்பொழுது திமுக வாகனங்களை அருகில் விடவேண்டாம் எனவும் கூறினார். மேலும் அவர் திமுகவை குற்றம் சாட்டுவது அவ்வப்போது மைக் வேலை செய்யாமல் போனது அங்குள்ள மக்களை சிரிப்படையச் செய்தது

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!