இன்னும் 7% தான்… திமுக கதை முடிந்தது… ஹெச் ராஜா கணிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2025, 5:53 pm

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

அவர் கூறியதாவது, செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கிறார் அவரது உணர்வு எனக்கு புரிகிறது. எப்போதும் ஒற்றுமையே பலம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமை ஏற்று இருப்பது முன்னாள் முதல்வர் பழனிச்சாமி.

தேசிய ஜனநாயக கூட்டணியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்துவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு, இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.

போதை பழக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வாக்காளரும் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். பலவீனப்படுத்துவது எதிர்கால சந்ததிக்கு ஆபத்தாக முடியும். கருத்து வேறுபாடு இருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு சித்தாந்தமும் எங்கள் உழைப்பும் தான் காரணம்.
பக்கத்து வீட்டுக்காரன் பலவீனமானால் நான் பணக்காரன் என்பது போன்ற கண்ணோட்டம் பாரதிய ஜனதா கட்சியினர் யாருக்கும் இல்லை. கூட்டணியில் எத்தனை கட்சிகள் இடம் பெற்று இருக்கிறது என்பது முக்கியமல்ல.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக பெற்ற ஓட்டுக்களை 24ம் ஆண்டு தேர்தலில் தக்க வைத்து கொள்ள முடியவில்லை ஏழு எட்டு சதவீதம் சரிந்திருக்கிறது. அதேபோல் இன்னும் ஒரு ஏழு எட்டு சதவீதம் சரிந்தால் முடிந்து போனது கதை என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!