வாக்குச்சாவடி மையத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே அனுமதி.. மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பாஜக புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2024, 2:23 pm

வாக்குச்சாவடி மையத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே அனுமதி.. மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பாஜக புகார்!

தற்போது கோவை மாவட்டம் முழுவதும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையிலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இது சமயம் பாஜக விவசாயிகள் அணி மாநில தலைவர் நாகராஜ் திடீரென மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிப்பதற்காக வந்திருந்தார்.

மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால் தொலைபேசியில் அவரிடம் பேசும் போது சூலூர் கண்ணம்பாளையம் சலக்கரசல் போன்ற பகுதிகளில் வாக்குப்பதிவு செய்வது மிகவும் தாமதமாகி வருகிறதாகவும் ஒவ்வொரு நபராக வாக்குப்பதிவு செய்யும்போது 30 நிமிடங்களுக்கு மேலாக தாமதத்தை வேண்டுமென்றே அதிகாரிகள் ஏற்படுத்துகின்றனர்.

மேலும் வாக்குச்சாவடி மையத்திற்குள் அதிமுக திமுக இரண்டு உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். பாஜக உறுப்பினர்களை வாக்குச்சாவடி மையத்திற்குள் அனுமதிப்பதில்லை என்ற புகார் தெரிவித்தார்.

மேலும் படிக்க: #GunFire வாக்குப்பதிவின் போது துப்பாக்கிச்சூடு : அலறி ஓடிய வாக்காளர்கள்.. மர்மநபர்களால் பதற்றம்.!!!

இது குறித்து கேட்டறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரி காந்தி குமார் பாடி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் பொதுமக்கள் வெயிலில் காப்பதற்காக சாமியான பந்தல் போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்ததாக பாஜக விவசாயிகள் அணி மாநில தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…