இந்தி திணிப்பு படம்தான் இது.. தமிழ்நாட்டில் தான் இதை பற்றி பேச முடியும் : நடிகை கீர்த்தி சுரேஷ்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2024, 8:05 pm

சிறுமிகளுடன் அமர்ந்து ரகு தாத்தா ட்ரெய்லரை பார்த்து ரசித்த நடிகை கீர்த்தி சுரேஷ் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடத்துள்ள படமான ‘ரகு தாத்தா’ ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மதுரை கோர்ட் யார்ட் விடுதியில் ரகு தாத்தா படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டு படத்தின் ட்ரெய்லரை சிறுமிகளுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கீர்த்தி சுரேஷ் : மதுரை எனக்கு ரொம்ப பிடித்த ஊர் மதுரை நான் அடிக்கடி வந்துசெல்லும் ஊர் மல்லிகை பூ மீனாட்சியம்மன் கோவில் என மதுரையில் எனக்கு ரொம்ப பிடிக்கும்

ரகு தாத்தா படம் அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய படமாக இருக்கும், இப்படத்தில் இந்தி திணிப்பு பற்றி ஆங்காங்கே பேசப்பட்டிருக்கும்

பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய பல விஷயங்களை பற்றி நகைச்சுவையாக இந்த படத்தில் சொல்லி இருப்போம் ஜாலியாக பாப்கார்ன் சாப்பிட்டுகொண்டே பேமிலியோடு உட்கார்ந்து பார்க்கக்கூடிய படமாக இருக்கும் இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்

பெண்ணியத்திற்காக போராடக்கூடிய கதாபாத்திரமாக நடித்திருப்பதால் 1970 ஆம் காலகட்டத்தில் இருந்த உள்ள பெண்களின் கதை. பெண்கள் மீது நிறைய விஷயங்கள் திணிக்கப்படுகிறது அது இன்றும் நடைபெற்று வருகிறது

அதனை ஆங்காங்கே சிறு சிறிய வசனங்களாகவும், காட்சிகளாகவும் படத்தில் இடம்பெற்றிருக்கும் . இந்த படத்தை பார்க்கும் போது இதெல்லாம் பெண்கள் மீது திணிக்க படக்கூடிய விஷயம் தானே ஆங்காங்கே தெரியும்

காலம் காலமாக வந்தால் கலாச்சாரம் திடிரென வந்தால் திணிப்பா என்ற டயலாக் இருக்கும், கலாச்சாரம் என்ற பெயரில் சின்ன சின்ன விஷயங்கள் திணிக்கப்படுவதை படத்தில் காட்டியிருப்போம். ஆனால் எதுவுமே சீரியஸாக இருக்காது அது காமெடியாக சொல்லியிருப்போம் இது முழுவதும் காமெடி படம் தான்

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு? இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை நடிப்பு மட்டும் தான். வருங்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்பா? என்ற கேள்விக்கு? ஒருவேளை அரசியலில் வந்து விட்டால் அன்று நான் கூறியதை சொல்லிக் காட்டக்கூடாது என்பதற்காக நான் இல்லை என்றும் மறுத்து வருகிறேன்

அரசியல் ஆசை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என பதிலளித்தார்
இந்த படத்தில் ஹிந்தி திணிப்பை பேசுவதற்காக பெண்ணை ஹீரோயினாக காட்டியுள்ளோம் , பெண்களை பிரதானமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளோம் இதனை ஒரு ஆண் நடிகர் நடித்திருந்தால் கதையை எடுத்துச் சென்று இருக்க முடியாது

இன்றுவரை இப்படி ஒரு படத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் இந்திய திணிப்பு என்பதை படமாக எடுத்திருக்க மாட்டார்கள் ,்இந்த படத்தில் இந்தியை திணிக்க கூடாது என்பதை தான் சொல்லி இருப்போம் படம் பார்த்தீர்கள் என்றால் புரியும்

பொண்ணுங்க என்றால் அடக்கமாக இருக்க வேண்டும் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என பெண்கள் மீது பல்வேறு திணிப்புகள் செலுத்தப்படுகிறது

கே ஜி எஃப் காந்தாரா எடுத்த தயாரிப்பு நிறுவனம் தமிழில் முதல் முதலில் எடுக்க வேண்டுமென்றால் சில விஷயங்களை யோசித்து இருப்பார்கள் அப்படி தான் ஹிந்தி திணிப்பை ரொம்ப காமெடியாக விசுவலில் கொண்டு வந்திருக்கும்

மொழியை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரி ஒரு படத்தை பற்றி பேச முடியும் நம் மக்கள் தான் இதை புரிந்து கொள்வார்கள் அதனால் தான் ரகு தாத்தா என பெயரை குறிப்பிட்டு குறிப்பிட்டுள்ளோம்

இயக்குனர் வித்தியாசமாக யோசித்து இதனை இயக்கியுள்ளார். தமிழில் முதன்முறையாக மொழி இதனை யாரும் டச் பண்ணாத விஷயம் இதனை தொடர்பாக படம் எடுத்தது எனக்கு ஸ்பெஷலான விஷயம் பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக இருக்கும்

படம் முழுக்க காமெடியாக இருக்கும் படம் முடிந்து செல்லும் பொழுது பெண்களையும் ஆண்களையும் யோசிக்க வைக்கும்

இந்த ஆண்டுதான் ஹிந்தியில் முதல் முறையாக படம் படிக்கிறேன் அட்லீ இயக்கத்தில் ஹிந்தி படம் நடிக்கிறேன் ரகு தாத்தாவில் நடிக்கும்போதே அந்த படத்தின் பேச்சு வந்தது அங்குள்ள சில மக்கள் கமெண்ட் செய்தாழ்கள் ஹிந்தி திணிப்பை பற்றி பேசுகிறீர்கள் ஹிந்தி படத்தில் நடிக்கிறீர்கள் என கமெண்ட் அடித்தார்கள் ஆனால் நான் இந்தி திணிப்பை பற்றி மட்டும் தான் பேசினேன்

மொழி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் திணிப்பு என்றாலும் திணிப்பை பற்றி தான் பேசுகிறோம் திணிப்பை பற்றி தான் பேசினோம் மொழி மட்டுமல்ல எந்த விஷயத்தை திணித்தாலும் அது தப்பான விஷயம் தான் அதி நம்ம ஊரில் கனெக்ட் பண்ணும் விஷயம் தான் என்றார்.

திரைப்படத்துறையில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்விக்கு?
சினிமாவில் பாதுகாப்பு நல்லாவே உள்ளது பிரச்சனை என்று வந்தால் எல்லா துறையிலும் வரலாம் சினிமா என்கிறது எல்லா விஷயங்களும் கேள்விப்படுவதால் விஷயங்கள் தெரிகிறது மற்ற துறைகளில் கேட்காததினால் அது குறித்து தெரிவதில்லை சினிமா என்பது பாதுகாப்பு இருக்குமா என்று யோசிக்க விஷயம் கிடையாது என்றார்

இந்தி தெரியுமா என்ற கேள்விக்கு?

எனக்கு ஹிந்தி நன்கு தெரியும் என்றார்.

ஆகஸ்ட் 15 பல்வேறு படங்கள் வெளியாவது குறித்த கேள்விக்கு :

ஆகஸ்ட் 15 அன்று நிறைய படங்கள் வருகிறது அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும் என ஆசை

விக்ரம் சார் நடித்துள்ள படம் வெளிவருகிறது இரண்டு மூணு படங்கள் வருகிறது எல்லா படமும் நல்லா இருக்க வேண்டும் இதில் வேறு வித காமெடி படமாக ரகு தாத்தா இருக்கும் மற்ற படங்களை விட இந்த படம் வித்தியாசமாக இருக்கும் இது வேற ஒரு பாதையில் இருக்கும்

இயக்குனர் சுமன் பல்வேறு பெரிய திரைப்படங்களுக்கு எழுதி இருக்கிறார் அவர் முதன் முதலாக தமிழில் இந்த படத்தை எழுதி இயக்கி எடுத்திருக்கிறார் வேறொரு மாதிரியான காமெடி படத்தை எடுத்திருக்கிறார்

ஜானுடைய மியூசிக் முதல் முறை என்னுடைய ஃபேவரிட் ஆல்பம் இது இதில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் போராட்டம் தொடர்பான பாடல்களும் இருக்கும் கானா பாடல் இருக்கிறது

எனக்கு தியேட்டரில் சோலோவாக வெளியாக கூடிய முதல் படம் எனக்கு ஸ்பெஷலான படமாக இருக்கும்

கேமராமேனாக யாமினி முதல்முறையாக ஒரு பெண் கேமரா மேனாக எடுத்த படம்

ஹீரோவோவுடனான கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகி இருக்கிறது சில விஷயங்களை முழு விவரமாக சொல்ல முடியாது வித்தியாசமான கெமிஸ்ட்ரி இருக்கும் படத்தில் தெரியும் என்றார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!