என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் சீட்.. ராமதாஸ் திட்டவட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2025, 1:59 pm

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் நடைபெற உள்ள மாநாடு காண ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் உடன் பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசையில், ஆகஸ்ட் 10 பூம்புகாரில் மகளிர் மாநாடு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. அதற்கான ஆய்வு கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.

புதிய மாவட்ட செயலாளர்கள் அறிமுக கூட்டம் இன்று. இரண்டு பேரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பது கட்சி தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது என்று கேட்டபோது பிரச்சனை என்றால் நிச்சயம் தீர்வு ஏற்படும், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து 46 ஆண்டு காலமாக கட்சி, சங்கம் இரண்டிலும் வழி நடத்தி வருகிறேன்.

அந்த வகையில் வன்னியர் சங்கத்தின் தலைவர் பூத்தா அருள்மொழி கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகிய நான் செயல்பட்டு வருகிறோம், இது மட்டுமல்லாமல் 34 அமைப்புகளை தொடங்கி வழிநடத்தி வருகிறேன். இனி இவர்களை முடுக்கி விட்டு உற்சாகப்படுத்தி வேகமாக செயல்பட வைக்க உள்ளேன்.

அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ளோம் அதில் மிகப் பெரிய வெற்றியை பெற உள்ளோம், இங்கு வந்திருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

இப்போது கூட்டணி பற்றி எதுவும் சொல்ல முடியாது. நல்ல கூட்டணி வித்தியாசமான கூட்டணி வெற்றி பெறுகின்ற கூட்டணி ஆக இருக்கும். இங்கு வந்திருக்கும் பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் தான் இந்த தேர்தலில் நிற்கப் போகிறார்கள்.

இவர்களை தான் நான் தேர்ந்தெடுப்பேன், இவர்கள்தான் எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்கள், எல்லா அதிகாரமும் எனக்கு உண்டு, கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நல்ல நல்லவர்களை வல்லவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்குவேன் என்று இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்.

முருகன் மாநாட்டில் பெரியார் அண்ணா பற்றி இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று கேட்டபோது எவரையும் இழிவுபடுத்தக் கூடாது என்று ராமதாஸ் தெரிவித்தார்.

சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் பாட்டாளி மக்கள் கட்சியின் இணை பொதுச் செயலாளராக நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!