ஊட்டி தனியார் விடுதியில் களைகட்டிய சூதாட்டம் : 32 பேர் கைது, ரூ.1.46 லட்சம் பறிமுதல்!!

22 November 2020, 9:38 am
Ooty Lodge - Updatenews360
Quick Share

நீலகிரி : உதகை தனியார் விடுதியில் சட்டத்திற்கு புறம்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 32 பேர் கைது செய்து ரூபாய் 1 லட்சத்து 46 ஆயிரம் காவல் துறையினர் கைப்பற்றினர்.

ஊட்டி, கூட்செட் ரோட்டில் உள்ள தனியார் காட்டேஜில் ஆன்-லைன் சூதாட்டம் நடப்பதாக ஊட்டி ஜி1 போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் வினாயகம் தலைமையில், எஸ்.ஐ., ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் சம்மந்தப்பட்ட காட்டேஜ்க்கு சென்று ஆய்வு செய்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்ததை அடுத்து, காட்டேஜை சுற்றி வளைத்தனர்.
பின், அந்த காட்டேஜில் இருந்த 50 பேரை வேனில் ஏற்றி ஊட்டி சிறுவர் மன்றத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்,

விசாரணைக்கு பின், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 32 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,.

Views: - 20

0

0