கோவையில் ஆலயம் அறக்கட்டளை சார்பில் இலவச யோகா மையம் திறப்பு : பல்வேறு தரப்பினர் வரவேற்பு!!

22 November 2020, 10:41 am
aalayam- Updatenews360
Quick Share

கோவை : ஆலயம் அறக்கட்டளை சார்பாக இலவச யோகா மையம் திறக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் முக்கிய அறக்கட்டளைகளில் ஒன்று ஆலயம் அறக்கட்டளை. பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி, ஏழை பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி உள்பட பல்வேறு உதவிகளை இந்த அறக்கட்டளை செய்து வருகிறது.

இப்படியிருக்க, கொரோனா வலையில் கோவை மாவட்டம் சிக்கிய போது, வாழ்வாதாரம் இழந்து தவித்த ஏழை மக்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உணவுப் பொருட்கள், கபசுர குடிநீர் ஆகியவை ஆலயம் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டது.

தற்போது, கோவை மாவட்டத்தில் தொற்று குறைந்த போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வுகளை கோவை மக்களிடையே ஏற்படுத்தி வரும் ஆலயம் அறக்கட்டளை, மேலும் ஒரு பாரட்டத்தக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், யோகா மற்றும் உடற்பயிற்சியே தற்போது சிறந்த நோய் எதிர்ப்பு காரணிகள் என உலக சுகாதார அமைப்பே கருத்து தெரிவித்துள்ளது.

எனவே, கோவை மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் முயற்சியாக, ஆலயம் அறக்கட்டளை சார்பில் இலவச யோகா மையம் திறக்கப்பட்டுள்ளது.

வடவள்ளி அருகே உள்ள வள்ளியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம் யோகா மையத்தை ஆலயம் அறக்கட்டளையின் நிறுவனர் Er. R. சந்திரசேகர், அறக்கட்டளையின் இயக்குநர் ஷர்மிளா சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த யோகா மையத்தில் பிரணயம், முத்ரா, பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் எனத் தனித்தனியாக பல்வேறு விதமான யோகாசனப் பயிற்சிகள் மற்றும் தியான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதோடு, 9843247777, 9047017777 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு இலவச வகுப்புகளையும் பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.,

ஆலயம் அறக்கட்டளையின் இந்த நடவடிக்கைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

Views: - 17

0

0