“தமிழகம் முழுவதும் கோயில்கள் திறப்பு” கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன தெரியுமா..?

31 August 2020, 1:27 pm
Quick Share

கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு மழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் மாநிலவாரியாக முதலமைச்சர்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை ஆகியோரிடம் பிரமதர் தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டு பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இன்று முதல் தற்போதைய பொது முடக்கம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்ததாக பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தினார்.

மேலும் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகம் அன்லாக் 4.0 ஊரடங்கு தளர்வுக்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு பொது முடக்கத்தில் தற்போது பல்வேறு கட்ட தளர்வுகளை ஏற்படுத்தி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கூடுதலாக பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் தரிசனம் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கோயில்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் :-

 • உடல் வெப்பநிலை அறியும் பரிசோதனைக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
 • கோயில்களில் தனிமனித இடைவெளி கட்டாயம்.
 • காலணியை பாதுகாப்பிடத்தில் அவர்களே விட்டு, எடுத்து செல்ல வேண்டும்.
 • கோயில்களில் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
 • கால அபிஷேகம் அர்ச்சனை, கட்டண சேவைகள் மற்றும் விழாக்களில் கூட்டமாய் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்
 • வழிபாட்டின் போது குறியிடப்பட்ட இடங்களில் நின்று செல்ல வேண்டும்.
 • கோயில்களில் இருக்கும் பொருட்களை தொடக் கூடாது.
 • தனிமனித இடைவெளியுடன் தீபத்தை தொட்டு வணங்கி செல்லலாம்.
 • அர்ச்சகர்களும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
 • எந்த பிரசாதத்தையும் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு நேரடியாக தரக்கூடாது.
 • தனித்தனியே பிரசாதங்கள் இருக்கும் தட்டுகளில் இருந்து பக்தர்களே எடுத்துக்கொள்ளலாம்.
 • உண்டியலை தொடாமல் காணிக்கை செலுத்த வேண்டும்.
 • அறிவுறுத்தப்பட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களுக்கு செல்லக்கூடாது.
 • கோயில் வழிபாட்டுத் தளங்களில் கீழே விழுந்து வணங்குதல் கூடாது.

Views: - 0

0

0