கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட குளக்கரைகள் திறப்பு..!

26 February 2021, 6:13 pm
Quick Share

கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளம் குளங்களைக்கரைகளை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளில் கிருஷ்ணாம்பதி, குளம், செல்வம்பதி குளம், குமாரசாமி குளம், செல்வ சிந்தாமணி குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், மற்றும் குறிச்சி குளம், ஆகிய ஏழு குளங்கள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியும் இடம்பிடித்ததை தொடர்ந்து கோவையை பளபளக்கச்செய்ய பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனொரு பகுதியாகவே, உக்கடம் பெரியகுளக்கரையை மேம்படுத்த ரூ.62.17 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கின. உக்கடம் பெரியகுளத்தின் கரை ஓரங்களில், நடைபயிற்சி பாதை, மிதிவண்டிப் பாதை, இருக்கைகள், அமைக்கப்பட்டது.

மேலும், திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத்திடல், உணவுக் கூடங்கள், கழிப்பறைகள், பாதுகாப்பு கேமரா, எல்ஈடி விளக்குகள், பறவைகளைப் பார்வையிட பார்வை கோபுரம், பாதுகாப்பு வாகன நிறுத்தம், என பல்வேறு திட்ட பணிகள் அமைக்கபட்டன. குளக்கரை முழுவதும் இயற்கையான கற்பாறைகள், அழகு செடிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் குளத்திற்கு வரும் கழிவு நீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ஈர நில அமைப்பும் உபரிநீர் கலிங்கும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுழலில், மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளத்தை இன்று மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Views: - 14

0

0