ஆபரேஷன் சிந்தூர்…25 நிமிடங்களில் பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியா… என்ன நடந்தது?
Author: Udayachandran RadhaKrishnan7 May 2025, 11:59 am
ஜம்மு காஷ்மீர் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த் லஷ்கர் . தொய்பா அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோடி பல்வேறு அதிரடியான நடவடிக்கைகள் எடுத்தார்.
எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா ஆயத்தமாகி வந்தது. அதே சமயம், பாகிஸ்தானும் பதிலடி தாக்குதல் நடத்துவோம் என கூறியிருந்தது.
இன்று அதிகாலை 1 மணியளவில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது.
இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், இந்தியாவில் உள்ள பிரபலங்கள் பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த தாக்குதல் சரியாக அதிகாலை 1.05 மணிக்கு துவங்கியுள்ளது. 1.30 மணியளவில் வெறும் 25 நிமிடங்களில் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.