கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த மக்களிடம் சமாதானம் பேச வந்த அமைச்சருக்கு எதிர்ப்பு : கொந்தளித்த மக்களால் பாதியில் புறப்பட்ட பொன்முடி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2022, 5:56 pm

வருவாய்த்துறை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த சித்திலிங்கமடம் கிராமத்தில் கடையடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை செய்ய வந்த அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுதும் நவம்பர் ஒன்றாம் தேதி ஊராட்சி தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்திருந்தன. அனைத்து ஊராட்சிகளையும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சித்திலிமடம் கிராம எல்லையை பிரித்து எடப்பாளையம் தனி வருவாய் கிராமமாக பிரிப்பதை கண்டித்து இன்று கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து சித்திலிங்கமடம் கிராமத்தில் உள்ள 50 க்கும் மேற்ப்பட்ட கடைகளை அடைத்தும் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சித்திலிங்கமடம் கிராமத்தில் கடையடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்த சென்ற உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சித்தலிங்கமடம் ஊராட்சியை பிரித்து எடப்பாளையம் தனி வருவாய் கிராமமாக செய்வதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கொட்டுமழையிலும் பேச்சுவார்த்தை செய்ய வந்த அமைச்சர் பொன்முடி சித்தலிங்கமடம் புதுப்பாளையம் இரண்டு கிராம மக்கள் கோரிக்கையை அடுத்து தான் இது போன்று நடவடிக்கை மேற்கொண்டு இருக்கின்றன.

உங்களை யாரோ தூண்டிவிடுகிறார்கள் ஒரு மாத காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சித்திலிங்கமடம் கிராமத்திற்கு வர உள்ளன. மேலும் திமுக ஆட்சியில் தான் இந்த கிராமத்திற்கு மகளிர் மேல்நிலைப்பள்ளி கொண்டுவரப்பட்டன என தெரிவித்தார்.

அப்பொழுது திடீரென பொதுமக்கள் பகுதியில் ஒருவர் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது அப்படி என்று சொன்னபோது கோபப்பட்ட அமைச்சர் பொன்முடி 10 வருஷமா யார் ஆட்சியில் இருந்தது அப்ப கேட்க வேண்டியது தானே என்ன கோபமாக பேசினார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்களிடையே ஒரு நபர் அதிமுக,திமுக என கட்சி பற்றி எல்லாம் பேசாதீங்க நீங்க அப்படின்னு சொல்லி சத்தம்மிட்டனர் . இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து அமைச்சர் பொன்முடி கிளம்பி சென்று விட்டார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?