எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய இறைவனை இறைஞ்சுகிறேன்..! ஓபிஎஸ் அறிக்கை

16 August 2020, 3:07 pm
O panneerselvam - Online Tamil News
Quick Share

சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை இறைஞ்சுகிறேன் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:  தனது அற்புத குரல் வளத்தால் தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இசை ரசிர்களின் இதயங்களில் தன்னெக்கென ஒரு தனி இடம் பிடித்து அவர் தம் மனங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டி அவர்களது அன்பைப்பெற்றவர் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து எனது மனம் மிகவும் துயரம் கொள்கிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அன்பைபெற்று அடிமைப்பெண் திரைப்படத்தில்,ஆயிரம் நிலவே வா” என்னும் பாடலும் தன்னுடைய திரையுலக பின்ணனி பாடல் வரலாற்றில் திருப்புமுனை கண்டு இதுவரை ஏறுமுகம் அன்றி வேறுமுகம் காணாதவர் எஸ்.பி.பி.அவர்கள்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை வரவேற்று வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்திட வெற்றி உலா வருக! அம்மா வெற்றி உலா வருக… என்று அவர் பாடிய இனிய பாடல் ஒலிக்காத கழக மேடை இல்லை. அப்பாடல் வரிகளை பாடாத தமிழ் மக்களும் இல்லை.

அந்தப்பாடலில் தானம் தர்மம் இருபுறமும்…துணையாய் வருகிறது வானம் நீ வரும் வழியில் எல்லாம் பூ மழை பொழிகிறது என்று மாண்புமிகு அம்மா அவர்களை புகழ்ந்து அவர் பாடியதை கேட்டால் மெய்சிலிர்க்கும். தனது இனிய குரலால் இசை ரசிகர்களின் இதயங்களை கட்டிப்போட்டவர் எஸ்.பி.பி. அன்பு சகோதரர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் விரைந்து குணடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். தேனினும் இனிய அவரது தேமதுரக் குரலோசை மீண்டும் வெள்ளித்திரை வானில் ஒலித்திடவே அவர் பூரண நலம் பெற்று மீண்டு வருக வருக என்று அன்போடு வாழ்த்துகிறேன் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

Views: - 23

0

0