ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு : கோவையில் நாளை ஆன்லைனில் துவக்கம்…

Author: kavin kumar
26 January 2022, 6:55 pm

கோவை: கோவையில் ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நாளை துவங்குகிறது.

கோவை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில், கணவன் அல்லது மனைவி பணிபுரியும் இடத்துக்கு, விருப்ப மாறுதல் பெற்றுச் செல்ல முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நாளை துவங்குகிறது. கணவன்- மனைவி வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் பட்சத்தில், கணவனோ, மனைவியோ யாரேனும் ஒருவர், மற்றொருவர் பணிபுரியும் மாவட்டத்துக்கு மட்டும் மாறுதல் பெற்றுச்செல்ல இயலும்.

மேலும், கணவன்-மனைவி இருவரும் தாங்கள் பணிபுரியும் மாவட்டம் அல்லது வேறு மாவட்டத்துக்கு மாறுதல் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்முன்னுரிமையை கணவன் அல்லது மனைவி யாரேனும் ஒருவர் பயன்படுத்திக் கொண்டாலும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இம்முன்னுரிமையை பெற இயலாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பித்தவர்கள், பணிபுரியும் மாவட்டத்துக்குள் பள்ளிகளை தேர்வு செய்ய இயலாது. கலந்தாய்வுக்கு வருகை புரியாமலோ, தாமதமாக வருகை புரிந்தாலோ பங்கேற்க இயலாது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!