கோவை மத்திய சிறையில் பெலிக்ஸ் ஜெரால்டை அடைக்க உத்தரவு : மே 31 வரை காவல் நீட்டிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 2:16 pm

கோவை மத்திய சிறையில் பெலிக்ஸ் ஜெரால்டை அடைக்க உத்தரவு : மே 31 வரை காவல் நீட்டிப்பு!

ரெட் பிக்ஸ் என்ற பெயரில் டிஜிட்டல் ஊடக நிறுவனம் நடத்தி வரும் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூபில் பிரபலமான சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது youtube பக்கத்தில் வெளியிட்டார்.

அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில், அது எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிலிப்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சவுக்கு சங்கர் தற்போது திருச்சி லால்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி சிறையில் இருந்த யூடியூபர் பிலிப்ஸ் ஜெரால்ட் பெண் காவலர்கள் பாதுகாப்புடன் இன்று கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5ல் நீதிபதி வி.எல் சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து நீதிபதி வி.எல் சந்தோஷ், பெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் படிக்க: தேர்தலில் I.N.D.I.A கூட்டணியின் நிலவரம் என்ன? டிஆர் பாலுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

இதை அடுத்து பெண் காவலர்கள் பாதுகாப்புடன் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!