திருப்பூரை நோக்கி படையெடுக்கும் வெளி மாநில தொழிலாளர்கள்.. ரயில் நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2021, 11:39 am
Tirupur - Updatenews360
Quick Share

திருப்பூர் : வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் தொழிலாளர்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த சூழ்நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது பல்வேறு இடங்களிலும் தளர்வுகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலும் பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் 100% செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன் காரணமாக வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் மாவட்டத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் . இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு பரவாத வகையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .

அதன் ஒரு பகுதியாக இன்று மேற்கு வங்க மாநிலம் சாலிமர் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் மூலம் திருப்பூர் வந்திறங்கிய வெளிமாநில தொழிலாளர்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்திலேயே மாநகராட்சி சுகாதாரத் துறை மூலமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் தொடர்பு எண்கள் முகவரி ஆகியவை சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றன . மேலும் அவர்கள் செல்லும் நிறுவனங்களில் அவர்கள் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை முடிவுக்கு பின் அவர்களுக்கு பணி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Views: - 466

0

0