நம்ம ஊரு பொருட்காட்சி… கவனத்தை ஈர்த்த பாதாள கிணறு : சிலிரிக்க வைத்த சாகச நிகழ்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2025, 10:59 am
கோவை மாநகரில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாகவே உள்ளது. அவ்வப்போது அமைக்கப்படும் பொருட்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு மிகவும் உகந்ததாக இருந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை வடவள்ளியில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் நம்ம ஊரு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு உணவு வகைகள் மற்றும் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதாள கிணற்றில் நடைபெறும் கார் மற்றும் பைக் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பொருட்காட்சியில் பங்கேற்க பொது மக்களுக்கு அனுமதி இலவசமாக வழங்கப்படுகிறது.

மாலை 4 மணி முதல் 10 மணி வரை சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் விளையாடி மகிழ ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் பல்வேறு வகையான உணவு வகைகளும் இங்கு பரிமாறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
