சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்.. கோவை மத்திய சிறையில் உள்ள சிறுமியின் தாய் உள்பட இரு பெண்களிடம் விசாரணை…!!

Author: Babu Lakshmanan
6 July 2022, 6:18 pm
Quick Share

கோவை : ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், மருத்துவ குழுவினர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பெண்களிடம், விசாரணை மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்து தொடர்பாக போலீஸ் மற்றும் சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சிறுமியின் தாய் மற்றும் புரோக்கர் மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் விசாரணை மேற்கொண்டார்.

சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில், இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை விபரம் அறிக்கையாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Views: - 180

0

0