அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

15 March 2021, 6:55 pm
Asaduddin Owaisi_UpdateNews360
Quick Share

சென்னை : அமமுக கூட்டணியில் போட்டியிடும் ஓவைசி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் நெருங்கி வருவதால், தொகுதி ஒதுக்கீடு, தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட விஷயங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாகியுள்ளன.

அதிமுக, திமுக, கமல்ஹாசன் கூட்டணி, சீமான் ஆகியோருடன் டிடிவி தினகரனின் அமமுகவும் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தே.மு.தி.க.வுக்கு கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அமமுக கூட்டணியில் ஒவைசி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடி – வழக்கறிஞர் அஹமத்

கிருஷ்ணகிரி – அமீனுல்லா

சங்கராபுரம் – முஜிபுர் ரஹமான்

Views: - 9

0

0