நாங்க எப்பவுமே உஷார்தான்.. வேளச்சேரி பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்த உரிமையாளர்கள் ; வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2024, 4:11 pm

கடந்த வருடம் போல் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்த உரிமையாளர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை : சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்து இரண்டு நாட்களுக்கு அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அதிக கன மழை பெய்யும் என்பதால் வேளச்சேரி பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் நான்கு சக்கர வாகனமான கார்களை வேளச்சேரி-பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்தி நிறுத்தி உள்ளனர்.

கடந்த வருடம் இதே போல் வேளச்சேரி பகுதியில் கனமழை பெய்த போது குடியிருப்புகளை முழுகும் அளவிற்கு மழைநீர் தேங்கியது இதில் பல கோடி மதிப்பு உள்ள கார்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.

மேலும் சென்னையில் இருந்து வெளியேறும் மழை நீர் அனைத்தும் வேளச்சேரி பள்ளிக்கரணை வழியாக சதுப்பு நிலம் செல்வதால் அந்த பகுதியில் பெருமளவு பாதிப்பு ஏற்படும்.

இதனால் வேளச்சேரி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை வேளச்சேரி பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தின் மேல் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் மேம்பாலத்தின் மேல் ஓரமாக கார்கள் அணிவகுத்து நிற்ப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறதா என போக்குவரத்து போலீசாரும் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!