‘வண்டிய நிறுத்து’… டோல்கேட் போல சாலையில் நின்று லாரியை மடக்கிய படையப்பா யானை… மூணாறில் மீண்டும் முகாம்..!!

Author: Babu Lakshmanan
26 February 2024, 2:20 pm

கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு மீண்டும் வந்த படையப்பா யானை, நயமக்காடு எஸ்டேட் வழியாக வந்த லாரியை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காலை 8:30 மணிக்கு நயமக்காடு எஸ்டேட் சாலையில் படையப்பா யானை வந்துள்ளது. அப்போது, அந்த வழியாக தமிழகத்தில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர், யானையை பார்த்து பயந்து நிறுத்தினார். ஆனால், படையப்பா யானை லாரியை சேதப்படுத்தவோ அல்லது டிரைவரை சேதப்படுத்தவோ இல்லை. ஆனால், லாரியை எடுத்துச் செல்லும் டிரைவர் முயற்சியை யானை தடுத்து நிறுத்தியது.

இதையடுத்து, ஜீப்பில் வந்த தொழிலாளர்கள் சத்தம் போட்டு யானையை விரட்டினர். படையப்பா யானையால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கிருந்து சென்ற யானை இன்னும் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது.

இடைவேளைக்குப் பிறகு மீண்டும் படையப்பா யானை, மக்கள் வசிக்கும் பகுதிக்குள் தற்போது இறங்கியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?