பகல்காம் தாக்குதலால் பெற்றோரை இழந்த 22 குழந்தைகள்.. கல்விச் செலவை ஏற்ற ராகுல் காந்தி!
Author: Udayachandran RadhaKrishnan29 July 2025, 1:18 pm
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் “ஆப்பரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தது.
இதையும் படியுங்க: யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது… தேர்தல் நெருங்கும் போது கேளுங்க : இபிஎஸ் சஸ்பென்ஸ்!
இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல்களால் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார்.

இதனை ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா உறுதிப்படுத்தினார். இந்த சம்பவங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு மற்றும் ராணுவம் மேலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், ஆபரேஷன் மகாதேவ் மூலம் தீவிரவாதிகளை இந்திய சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.
