பழனி கும்பாபிஷேகத்தால் திமுக ஆட்சிக்கு கெட்ட காலம் தொடங்கிவிட்டது : காடேஸ்வரா சுப்பிரமணியன் பரபரப்பு பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2023, 12:54 pm

திருப்பூர் யூனியன் மில் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு உள்ள குளறுபடிகளை தமிழக அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநில தலைவர் சுப்பிரமணியம் திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள பங்களாதேஷ் உள்ளிட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள் அமைதியை சீர்குலைக்க வட மாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழ் மாநில தொழிலாளர்களுக்கு இடையே மோதல் போன்ற போக்கை உருவாக்கி வருவதாகவும் , உடனடியாக காவல்துறையும் உளவுத்துறையும் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என தெரிவித்தார் .

மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு சேது சமுத்திரத் திட்டம் மூலம் பயனடைவதன் காரணமாக அந்த திட்டத்தை நிறைவேற்றியே ஆவோம் என தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

பழனி கோவிலில் ஆகம விதிகளின் படி கும்பாபிஷேக விழா நடத்தப்படாததன் காரணமாக தமிழக அரசிற்கு கெட்ட காலம் துவங்கி விட்டது எனவும் பேட்டி அளித்தார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!