கெட்டுப்போன பஞ்சாமிர்தம்… நமத்துப் போன லட்டு, அதிரசம் ; பழனி முருகன் கோவில் பக்தர்கள் அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 1:24 pm

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யபடும் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம் மற்றும் முறுக்கு உள்ளிட்டவை கெட்டுப்போகி இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலம் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு திருக்கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம்,முறுக்கு உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு திருக்கோவில் ஊழியர்கள் வைத்து ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தைப்பூசத் திருவிழா முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பிரசாதங்கள் அனைத்தும் இன்று வரை பஞ்சாமிர்தங்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளது.

இதனை கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இரவு பகலாக விற்பனை செய்து வருவதால், கெட்டுப்போன பிரசாதங்களை பக்தர்கள் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள் 15 நாட்களுக்குள் விற்கப்பட வேண்டிய நிலையிலும், லட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற பிரசாதங்கள் தயாரிப்பு தேதி இல்லாமலும் விற்கப்படுவதால் கெட்டுப்போன வாசனை அடிப்பதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் பிரசாதங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள், பக்தர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தனர்.

பழனி உணவுத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகிகள் தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!