பழனி கோவிலை ஸ்தம்பிக்க வைத்த பெண்.. ரோப் கார், பேட்டரி கார், டிக்கெட் கொடுப்பது நிறுத்தம்.. நடந்தது என்ன?
Author: Udayachandran RadhaKrishnan12 July 2025, 4:38 pm
நேற்று பழனி கணபதி நகரை சேர்ந்தவர் பிரேமலதா வழக்கறிஞர், என்பவர் குடும்பத்தினருடன் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மின் இழுவை ரயில் , டிக்கெட் கவுன்ட்டர் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க சென்றபோது அந்த ரயிலிற்கு மூன்று நபர்கள் மட்டுமே செல்ல முடியும் என செக்யூரிட்டி கூறியுள்ளார்.
நாங்கள் ஆறு நபர்கள் வந்திருப்பதாக கூறி வழக்கறிஞர் பிரேமலதா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் , அடுத்த ரயிலில் அனுப்பி விடுவதாகவும் செக்யூரிட்டி கூறியதைடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: அமித்ஷா டெல்லியில் இருந்து விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்துவிடுகிறது : நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
இதனை எடுத்து மலைக் கோவிலுக்கு சென்ற வழக்கறிஞர் பிரேமலதா சாமி தரிசனம் முடிந்து மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கி வந்து விட்டு , பழனியில் உள்ள உள்ளூர் வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு பிரேமலதா மின் இழுவை ரயில் அருகே வழக்கறிஞர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தகராறில் ஈடுபட்டதாக கூறப்பட்ட மதுரை வீரன் என்ற கோவில் காவலாளியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர் மீது வழக்கறிஞர் பிரேமலதா கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்ணை தாக்குதல் ,மானமங்கம் படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மதுரை வீரன் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பெண் வழக்கறிஞர் பிரேமலதா தன்னை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன் என கண்டித்து இன்று உதவி ஆணையர் லட்சுமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் காவலாளிகள் திரண்டனர்.
பணிகளை புறக்கணித்துவிட்டு குறிப்பாக பேட்டரி கார் ,பஞ்சாமிர்தம் விற்பனை செய்யும் இடங்கள் ,பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணிகள் ,டிக்கெட் கொடுக்கும் பணிகளை உள்ளிட்டவைகளை தவிர்த்து விட்டு அடிவாரம் காவல் நிலையம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கோவிலுக்கு சென்ற பெண் வழக்கறிஞரை தாக்கிய நபர்கள் மீது உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோவில் நிர்வாகத்தை கண்டித்து வழக்கறிஞர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனியில் கோவில் ஊழியரை தாக்கிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செக்யூரிட்டிகள் – வழக்கறிஞர்கள் போராட்டமும் கோவிலுக்கு வந்த பெண்ணை அவமரியாதை செய்த காவலாளியை கைது செய்ய வேண்டும் என ஒரு தரப்பும் என மாறி மாறி போராட்டத்தில் ஈடுபடும் வரும் சம்பவம் பழனியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
