ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

10 May 2021, 10:09 pm
Quick Share

சென்னை: சென்னையில் எதிர்க்கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து பெற்றார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்துள்ளது. 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.இந்தநிலையில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவரை ( எதிர்க்கட்சி தலைவரை) தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 7-ந் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

நீண்ட விவாதங்களுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதிற்கு பிறகு ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து பெற்றார்.

Views: - 141

0

0