இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூறும் குருத்தோலை ஞாயிறு : கையில் குறுத்தோலைகளை ஏந்தி ஊர்வலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2023, 12:37 pm

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம், கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்கியது.

40 நாட்கள் அனுசரிக்கப்படும் தவக்காலத்தில், இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்தப் புனித வாரத்தின் முதல்நாள் குருத்தோலை ஞாயிறு எனப்படுகிறது. இந்த நாளன்று கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலையை ஏந்தியவாறு ஊர்வலமாக செல்வர்.

இந்நிலையில், கோவை காந்திபுரம் சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் ஆலயம் முன்பாக துவங்கியது. இதில், ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயச்சந்திரன் பொருளாளர் ரவி இன்பசிங், உதவி ஆயர் பாபி ஆல்ஃப்ரெட் ஜோசப்,சபை ஊழியர் ரேலி ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காந்திபுரம் சி‌ எஸ் ஐ‌ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில், ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குருத்தோலைகளை கையில் ஏந்திக்கொண்டு ஓசன்னா ஓசன்னா எனும் இயேசுவின் திரு நாமத்தை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் ஐந்தாவது வீதி மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வருகிற 7 ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை 9 ந்தேதி இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் ஈஸ்டர் பண்டிகை தேவாலயங்களில் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடதக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!