பெண்ணின் இடுப்பை கிள்ளிய பஞ்சாயத்து ஊழியர் கைது..! கோவையில் பரபரப்பு!!

Author: Udayachandran
14 October 2020, 5:00 pm
Hip Issue - Updatenews360
Quick Share

கோவை : மதுபோதையில் பெண்ணின் இடுப்பை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்ட பஞ்சயாத்து ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் முத்துசாமி சேர்வை தெருவில் வசிப்பவர் கணேசன்(வயது 52). அந்த பகுதி பஞ்சாயத்தில் குடிநீர் திறந்துவிடும் பணியை செய்து வருகிறார். இவர் அங்கு மேல் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். கீழ்தளத்தில் உள்ள வீடுகளில் சில குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கணேசன் கீழ்த்தளத்தில் உள்ள மோட்டார் சுவிட்சை ஆன் செய்வதற்காக இறங்கி கீழே வந்தார். அப்போது அங்கு குடியிருக்கும் 27 வயது பெண்ணிடம் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்தப் பெண்ணின் இடுப்பை கிள்ளி பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் அவரை பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 34

0

0