மாணவர்களோட எதிர்காலம் கேள்விக்குறி? நடவடிக்கை எடுங்க : கனியாமூர் பள்ளியை திறக்க கோரி பெற்றோர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 2:32 pm
Kaniyamoor Protest - Updatenews360
Quick Share

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் ஜூலை 17-ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டும், மேலும் கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஆதார மாகக் கொண்டும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீ சார் தொடர்ந்து கலவ ரத்தில் ஈடுபட்ட குற்றவாளி களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூலை 13ல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக பள்ளி சார்பில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவி செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கர். ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்திகா என ஐந்து பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

இவர்களுக்கு ஆக., 26ல் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இவர்களில் ஆசிரியைகள் சேலத்தில் தங்கியும், தாளாளர், செயலர், முதல்வர் மதுரையில் தங்கியும் நான்கு வாரங்கள் கையெழுத்திட நிபந்தனை விதித்தது.

கனியாமூர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தற்போது ஆன்லைனில் மட்டுமே கல்வி கற்கப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தில் சேதமடைந்த பள்ளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு உடனடியாக பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் மனு அளிக்க வந்துள்ளனர்.

Views: - 363

0

0