கேள்வி கேட்ட மாணவிகளின் பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட உதவி தலைமையாசிரியர் : நெகிழ வைத்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2023, 12:59 pm
Pudukottai - Updatenews360
Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி பள்ளி இன்று திறந்தவுடன் உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து 15 மாணவிகள் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தொட்டியதற்கு சென்று திரும்பும் வழியில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி அணையில் மூழ்கி நான்கு மாணவிகள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி நிலையில் இந்த பள்ளிக்கு கடந்த நான்கு நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் பள்ளி வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளது. மாணவ மாணவிகள் வழக்கம் போல் மனதில் சோகத்தை அடக்கிக் கொண்டு பள்ளிக்கு வருகை புரிந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 15 மாணவிகள் தொட்டியத்தில் மாநில அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விட்டு திரும்பும் வழியில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி அணையில் நீரில் மூழ்கி நான்கு மாணவிகள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட மாணவிகளை அழைத்துச் சென்ற இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகிய மூன்று பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவிகளின் மனநிலையை பாதிக்காத வண்ணம் கடந்த நான்கு தினங்களாக பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை மீண்டும் வழக்கம்போல் பள்ளி செயல்பட தொடங்கியது மனதில் கனத்த இதயத்தோடு தங்களுடைய தோழிகள் இல்லாமல் இருப்பதைக் கண்டு மனதில் வேதனையோடு சக மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வழக்கம்போல் வருகை தந்தனர்.

அப்போது பள்ளி திறக்க எதிர்ப்பு தெரிவித்த உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்கள், பிரேத பரிசோதனை அறிக்கையை கொடுத்துவிட்டு பள்ளியை திறக்க வேண்டும், பணக்காரர்கள் பெற்றால்தான் பிள்ளையா, நாங்கள் பெற்றால் பிள்ளைகள் இல்லையா, நான் படிக்கவில்லையென்றாலும் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவன் என மாணவியின் பெற்றோர் பேசினார்.

இதையடுத்து உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அதெல்லாம் வேண்டாம் எங்களுக்கு நீதி, நியாயம் வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் உயிரிழந்த நான்கு மாணவிகளுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரேயர் நடைபெற்றது. இதில் உயிரிழந்த மாணவிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் காண்போர் கண்களில் கண்ணீர் வர வைத்தது.

Views: - 414

0

0