பிக்பாஸ் 6-வது சீசன்.. முதல் போட்டியாளர் இந்த பிரபலத்தின் முன்னாள் மனைவியா.? வெளியான தகவல்.!

Author: Rajesh
24 May 2022, 1:18 pm
Quick Share

தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் கடந்து வந்துள்ளது. அந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். குறுகிய காலத்திலேயே மக்களின் பேவரைட் நிகழ்ச்சியாகவும் இது மாறியது. இதற்கு காரணம் இதில் உள்ள சண்டையும், சச்சரவுகளும் தான். சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஓடிடிக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை முதலில் கமல் தொகுத்து வழங்கினார் பின்னர் ஏதோ ஒரு காரணத்தில் விலகியதையடுத்து சிம்பு தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய பிரபலங்களுக்கு பிக்பாஸில் தனி மவுசு உண்டு. அவர்கள் மூலம் நிறைய கண்டெண்ட் கிடைக்கும் என்கிற காரணத்தால் அத்தகைய போட்டியாளர்களை களமிறக்க பிக்பாஸ் குழு முன்னுரிமை அளிக்கும்.

அந்த வகையில் இசையமைப்பாளர் டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்டு பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மோனிகாவை இசையமைப்பாளர் டி.இமான் கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். இதையடுத்து சமீபத்தில் மறுமணம் செய்துகொண்ட இமானை சமூக வலைதளங்களில் பங்கமாக கலாய்த்து வருகிறார் மோனிகா. அவர் பிக்பாஸில் களமிறக்கினால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 694

1

0