ஆட்சியர் வீட்டில் நடந்த தடல் புடல் விருந்து… டவாலிக்கு காரின் கதவை திறந்து வழியனுப்பிய கலெக்டர்.. நெகிழ்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2023, 7:57 pm

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர்களுக்கு டபேதாரராக அன்பழகன் என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.

தற்போதைய புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிற்கும் அன்பழகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக டபேதாராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி அவர் பணி ஓய்வு பெற்றார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அவரது இல்லத்தில் அன்பழகனுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்வுகள் மிக விமர்சியாக நடந்துள்ளது.

அதன்பின் அன்பழகனை தனது காரில் முன் சீட்டில் அமர வைத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நெகிழ்வோடு வீட்டுக்கு அனுப்பி வைத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?