சாலை விதிகளை மீறினால் அபராதத்தில் இருந்து இனி தப்பவே முடியாது: வாகன ஓட்டிகளே உஷார்..!!

Author: Aarthi Sivakumar
25 October 2021, 9:52 am
Quick Share

கோவை : கோவை மாநகர காவல் துறையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்குவோரிடம் இனி யு.பி.ஐ மூலமாகவும் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

கோவை மாநகர போக்குவரத்துக் காவல் துறையினர் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

முன்னதாக அபராதம் பணமாக மட்டுமே வசூலிக்க பெற்று வந்த நிலையில் போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதம் விதிக்கும் போது அதை பொதுமக்கள் அந்த இடத்திலேயே டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறையுன், அல்லது நெட் பேங்கிங் மூலம் அபராதம் வசூலிக்கும் முறையும் தற்போது நடைமுறையில் உள்ளது.

தற்போது அதை எளிமையாக்கும் விதமாக அனைத்து மின்னணு பரிவர்த்தனைகளான GPay,phonepe,Paytm என தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தாலும், அதிகாரியிடம் இ-சலான் இயந்திரம் மூலம் பணம் செலுத்தும் வகையில் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறையின் மூலம் விதிகளை மீறுவோர் இனிமேல் கையில் பணம் இல்லை, ஏ.டி.எம் இல்லை என்று கூறி நழுவ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 212

0

0