தெரு விளக்கு எரியாததால் தீப்பந்தம் ஏந்திய மக்கள் : போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

By: Udayachandran
14 October 2020, 11:19 am
Bjp Protest- Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையத்தில் தெரு விதிகள் விளக்கு எறியாததால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலம் அருகே, ஓடந்துறை, மணல்மேடு குடியிருப்பு பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீதியில் உள்ள தெருவிளக்குகள், இரு மாதங்களாக எரியவில்லை.

இரவில் இங்குள்ள நகராட்சி கழிப்பிடத்துக்கு செல்ல, தெரு விளக்குகள் எரியாததால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். செல்லும் வழியில், பாதாள சாக்கடை அமைக்க, குழிதோண்டி அதையும் மூடாமல் விட்டுள்ளனர்.

இது குறித்து குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, நிர்வாகத்தை கண்டித்து, பா.ஜ.க,வினர் மணல்மேடு வீதியில், தீப்பந்தங்களை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Views: - 51

0

0