சாதிச் சான்றிதழ் வேண்டும்.. வகுப்புகளைப் புறக்கணித்த பழங்குடியின மாணவர்கள்.. திருவாரூரில் நடப்பது என்ன?

Author: Hariharasudhan
28 January 2025, 1:59 pm

திருவாரூரில், உரிய சாதிச் சான்றிதழ் கேட்டு ஆதியன் பழங்குடியின மக்களின் குழந்தைகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்: திருவாரூர் திருத்துறைப்பூண்டியில், சாதிச் சான்றிதழ் கேட்டு ஆதியன் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோரும் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். முன்னதாக, திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டி, ஆப்பரகுடி, விளத்தூர், முத்துப்பேட்டை மற்றும் மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் குழந்தைகள் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கச்சனம் மற்றும் மன்னார்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். மேலும், இது குறித்து இந்து ஆதியன் வகுப்பின் மாவட்டத் தலைவர் அன்புமணி, கடந்த 2023ஆம் ஆண்டு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Tiruvarur Tribal people demands proper Caste Certificate

அதில், “இந்த மாணவர்கள் பள்ளிச் சேர்கையில் இந்து ஆதியன் வகுப்பில் தான் சேர்க்கப்படுகின்றனர். அப்போது சாதிச் சன்றிதழ் தேவைப்படுவதில்லை. ஆனால், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு செல்லும்போதுதான், பள்ளி நிர்வாகம் சார்பில் சாதிச் சான்றிதழ் கேட்கப்படுகிறது.

அதற்காக, அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தையோ, கோட்டாட்சியர் அலுவலகத்தையோ நாடும் போது. அவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஜோகி பிரிவினர் என சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு பெறப்பட்ட சாதிச் சான்றிதழின் அடிப்படையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெறுகின்றனர்.

இதையும் படிங்க: வாந்தி எடுத்த சீமான்.. அடுத்த 4 நாட்களில்.. ஆனால் ‘அது’ இல்லை.. கரு.அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

பின்னர், 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி படிப்புகளையும் இதே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சான்றிதழ் கொண்டு பயின்று வருகின்றனர். இவ்வாறு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் எங்கள் மாணவர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு கிடைப்பதால், அரசு சலுகைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை.

எனவே, எங்களுக்கு எங்களுடைய உண்மையான பிரிவான இந்து ஆதியன் (ST) பிரிவில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அரசு சலுகைகள் அனைத்தையும் பெற்று, நாங்கள் பொருளாதாரத்திலும், கல்வியிலும் உயர உரிய வழிவகைகளைச் செய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!