இரவோடு இரவாக காலி செய்த மக்கள்… ஒரே ஒரு முதியவர் மட்டும் வசிக்கும் கிராமம்.. ஷாக் சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2025, 6:21 pm
சிவகங்கை மாவட்டம், நாட்டாங்குடி கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், இந்த கிராமத்தைச் சேர்ந்த சோனை முத்து என்பவர் மர்ம நபர்களால் தலையை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நிகழ்ந்த கொலை சம்பவங்கள் கிராம மக்களிடையே பீதியை கிளப்பியது.
சுமார் 50 குடும்பங்கள் வசித்து வந்த இந்த கிராமத்தில், அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லாத நிலையில், இந்தக் கொலைகள் மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்தன.

இதன் காரணமாக, நாட்டாங்குடி கிராம மக்கள் அனைவரும் இரவோடு இரவாக ஊரை காலி செய்து வெளியேறினர். தற்போது, இந்த கிராமத்தில் ஒரு முதியவர் மட்டுமே தனியாக வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
