விஜய் தராதரம் அவ்வளவுதான்… 2026 தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் : அமைச்சர் ஆவேசம்!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2025, 1:14 pm
திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் CREDAI சார்பில் நடைபெறும் கண்காட்சியை அமைச்சர் கே.என் நேரு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காந்தி மார்கெட் அங்கே தான் செயல்படும் என தெரிவித்தார். மேலும் முதல்வரை ஆங்கிள் என குறிப்பிட்டு விஜய் விமர்சனம் வைத்தார் என்ற கேள்விக்கு? விஜயின் தராதரம் அவ்வளவு தான் ஒரு மாநிலத்தின் முதல்வர், பெரிய கட்சியின் தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் உள்ளார்.

நேற்று அரசியலுக்கு வந்தவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார் மக்கள் நல்ல பதில் சொல்வார்கள். நாங்களும் தேர்தலில் நல்ல பதில் சொல்வோம். ஒரு மாநில முதலமைச்சரை 50 பேர் கூடிவிட்டால் எது வேண்டுமானாலும் பேசுவது எப்படி சரியாக இருக்கும் என தெரிவித்தார்.
