ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை

22 July 2021, 6:58 pm
Quick Share

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளம்பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் அருகே கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பாண்டியன் (25). கோழிப்பண்ணை வைத்திருந்திருந்த இவர், அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் தனலட்சுமி (21) என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனலட்சுமி காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது.இந்த நிலையில் தனலட்சுமி அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த அருள்பாண்டியன் பின்தொடர்ந்து சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியின் முதுகில் குத்தியுள்ளார்.

இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி கீழே விழுந்த தனலட்சுமி உடனடியாக அரியலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.ஆனால் அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே இளம் பெண்ணை கொலை செய்த அருள்பாண்டியன், அவரது வயலுக்குச் சென்று அங்கிருந்த மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருள்பாண்டியன் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Views: - 128

1

0